புது தில்லி: இம்ரான் கானுக்கு முதுகு சொறிந்துவிட இணையதளங்களில் அவரைப் பாராட்டி ராப்பகல் கண் தூக்கம் இல்லாமல் செயலாற்றி வருபவர்கள் இப்போது அபிநந்தன் பெயரில் அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் விமானப் படை வீரர் அபிநந்தன் பெயரில் போலியான சமூக வலைத்தளப் பக்கங்கள் நிறைய உலவுவதாகவும், அபிநந்தன் சமூக
வலை தளங்களில் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும், அவர் பெயரில் பரப்பப்படும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம்’ என்றும் இந்திய விமானப்படை எச்சரித்துள்ளது.

சாகச வீரர் அபிநந்தன் பெயரில் பலர் போலியாக அவரது படத்தைப் பதிவு செய்து, அவர் பெயரில் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவற்றின் மூலம் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக, தாங்கள் செய்ய வேண்டிய இம்ரான் கானுக்கு கால் கழுவும் வேலையை அபிநந்தன் பெயரில் செய்து வருவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அபிநந்தன் பெயரில் கணக்கு துவங்கி, அதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டி பதிவுகளை இட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, இந்திய விமான படையின், ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, எந்த சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை. எனவே, அவர் பெயரில் போலி கணக்குகள் துவக்கி, பரப்பப்படும் பொய் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப் பட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...