தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருந்தும் வாக்களிக்க முடியாத விளையாட்டு வீரர்

Published:

Rahul Dravid - 2026

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில் இந்திரா நகர் எனும் பகுதியில் வசித்து வந்தார். அதன்பின்னர் இடம் மாறிய ராகுல், தற்போது சாந்தி நகர் பகுதியில் வசிக்கின்றார்.

இதையடுத்து தேர்தல் ஆணைத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இது குறித்து விசாரிக்க 2 முறை நேரடியாக சென்றுள்ளனர். ஆனால் ராகுல் வெளிநாடு சென்றிருந்ததால் வீட்டில் நுழைய அனுமதி தரப்படவில்லை.அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

ராகுல் ஸ்பெயினில் இருந்தார். வாக்களிக்க வேண்டி கர்நாடகா வருவதற்கு ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக ராகுல் டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img