சென்னை, பெங்களூரில் வாக்குப்பதிவு வெகுவாக சரிவு! ஏன்?

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

vote1 - 2026

சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி நிறைவடைந்த நிலையில் 70.90 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இன்று வாக்குப்பதிவு நடந்த சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது!

பெருநகரமான சென்னையில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான நிலையில், பெங்களூருவில் 50 சதவீதம் கூட பதிவாகவில்லை என்று தெரிகிறது.

பெங்களூர் வடக்கு தொகுதியில் 48.28% பெங்களூர் சென்ட்ரல் 42.43%, பெங்களூர் தெற்கு 49.36 % என்ற அளவில் தான் பதிவாகியுள்ளது.

பெரு நகரங்களில் இத்தகைய குறைந்த அளவு வாக்குப் பதிவு, இளம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதில் ஆர்வமின்மையைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. வாக்காளர் விழிப்பு உணர்வு பேரணி நடத்தும் போது கலந்து கொள்ள வரும் படித்தவர்கள் கூட ஜனநாயகக் கடமை ஆற்ற முன்வராததையே இது காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.