
- இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய்.
- சிக்கன் மற்றும் முட்டைகளின் மீது தடை.
- எச்சரிக்கையாக இருக்க வற்புறுத்தியுள்ள அரசு.
கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடும் முன்பே மற்றும் ஒரு நோய் தன் சீற்றத்தை காட்டி வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெளிப்பட்ட பறவை காய்ச்சல் நோய் கவலை அளிக்கும் விதமாக இந்தியாவெங்கும் பரவுகிறது.
இந்த வைரஸ் படிப்படியாக பிற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. தற்போது இந்த வைரஸ் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் அடையாளம் கண்டுள்ளார்கள். அந்தந்த மாநிலங்களில் பெரிய அளவில் காக்கைகள் மயில்கள் வாத்து கோழிகள் இறந்து வருகின்றன. இதனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வரிசையில் கேரளாவில் ஆயிரக்கணக்கில் பறவைகளைக் கொன்று வருகிறார்கள்.
இந்நிலையில் ஹிமாச்சல் அரசாங்கம் பறவைக் காய்ச்சல் நோய் குறித்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்தி வருகிறது. இதன்படி மாநிலத்தில் உள்ள பல இடங்களில் சிக்கன் முட்டைகள் மீன்கள் விற்பது குறித்து தடைவிதித்துள்ளது. மக்களிடம் கூட பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது என்றும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்க்ரா மாவட்டத்திலுள்ள பாங்க் டாம் ஏரியில் வாத்துகள் பறவைக் காய்ச்சல் நோயால் தாக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானிலும் திங்களன்று 170 பறவைகள் இறந்துள்ளன.
ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு பரவிய இந்த தொற்று நோய் இப்போது கேரளாவுக்கு பரவியுள்ளது. அங்கு ஆலப்புழா கோட்டயம் மாவட்டங்களில் சில பறவைகளுக்கு வைரஸ் அடையாளங்களை அதிகாரிகள் கவனித்து உள்ளார்கள். சென்ற வாரம் அதிகாரிகள் பறவைகளின் சாம்பிள்களை பரிசோதிப்பதற்காக போபாலுக்கு அனுப்பியதில் அவற்றில் வைரஸ் அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.
சிந்தூர் என்ற இடத்தில் ஒரேயடியாக 1500 வாத்துகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த வைரஸ் பிற இடங்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக இந்த இடத்தைச் சுற்றிலும் கிலோமீட்டர் எல்லை வரை அனைத்து பறவைகளையும் கொன்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இதுவரை 12,000 வாத்துகள் மரணித்து உள்ளது என்றும் முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஒரு 36 ஆயிரம் பறவைகளை கொல்ல வேண்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பறவை காய்ச்சல் பரவிய இடங்களில் மக்களுக்கு கூட மருத்துவ சோதனைகள் செய்து வருகிறார்கள். பறவைக்காய்ச்சல் பரவிய இடங்களில் ஜலதோஷம் இருமல் ஜுரத்தால் அவதிப்படுபவர்களுக்கு பிரத்தியேக மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் பறவைக் காய்ச்சல் மிகவும் ஆபத்தானது என்று கண்டுபிடித்து முடிவு செய்துள்ளார்கள். பறவைகள் அதிகமாக இறக்கும் இடங்களில் அதனால்தான் உடனுக்குடனே தடைகளை அமல் படுத்தி வருகிறார்கள். கோழிகளோடு கூட பிற பறவைகளையும் இந்த இடங்களில் முன்னெச்சரிக்கையாக கொன்று வருகிறார்கள்.
இந்தியாவில் முதன்முதலில் இந்தூரில் இந்த பறவை காய்ச்சல் வைரஸை கவனித்தார்கள். பறவைக் காய்ச்சல் வைரசால் 100 க்கும் மேலாக காகங்கள் இறந்தன. இறந்துபோன காகங்களில் பறவைக்காய்ச்சல் நொய்த்தொற்று இருந்தது தெரிய வந்தது. இதனால் நாடெங்கிலும் எச்சரிக்கை அறிவித்துள்ளார்கள். காக்கைகளால் இந்த நோய் பரவும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளார்கள்.
பறவைக் காய்ச்சலின் பரபரப்பால் இன்டோர் நகரம் எல்லையில் 5 கிலோ மீட்டர் வரை கர்ஃப்யூ அறிவித்துள்ளார்கள். பறவை காய்ச்சல் ஏற்பட்ட பறவைகளை அடையாளம் காண்பதற்கு பிரத்தியேக நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு பிரத்தியேக கண்ட்ரோல் ரூம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.