காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கண்ணியமற்று நடக்கிறார்கள்! சிவசேனாவுக்கு தாவிய பிரியங்கா!

priyanka chaturvedi - 2026

புது தில்லி : காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்கின்றார்கள். இந்தப் புகாரை எத்தனை முறை கட்சித் தலைமையிடம் கொடுத்தும் அது, கண்டுகொள்ளவில்லை என்று கூறி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து சிவசேனைக்குத் தாவியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவர், அக்கட்சியின் தேசிய செயலாளர் கே.வேணுகோபாலிற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ” காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேர்ந்தேன். இளைஞர் காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அதை நிறைவேற்ற 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இந்த பதவி காரணமாக பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் நானும், குழந்தைகள் உள்ளிட்ட எனது குடும்பத்தினரும் சந்தித்துள்ளோம். நான் கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் கடந்த சில வாரங்களாக எனது சேவைகள் மதிக்கப்படவில்லை என்று கருதுகிறேன்.

கட்சியில் சில தலைவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை எடுத்துச் சொல்லியும் கட்சித் தலைமையும் கட்சியின் மேலிடமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. இதன் பிறகும் நீடிப்பது கண்ணியக்குறைவு என்பதால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று எழுதியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றிய பிரியங்கா சதுர்வேதியின் ராஜினாமா மற்றும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது, ஊடகங்களிலும் அரசியல் மட்டத்திலும் அவரது குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஏதாவது அரசியல் பின்புலத்தில் இருந்தாக வேண்டிய நிலையில், பிரியங்கா சதுர்வேதி தற்போது உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஊடகங்களில் பிரியங்கா சதுர்வேதியின் முடிவும் குற்றச்சாட்டுகளும் பட்டிமன்றப் புயலைக் கிளப்பியுள்ளது.

1 COMMENT

  1. என்ன சார், நீங்களும் திகிலான தலைப்பு செய்தி கொடுக்கிறீர்களோ என்று செய்தியை விறுவிறுப்புடன் படித்தேன், ஆனால் பிரியங்கா சதுர்வேதி என்று முடித்துவிட்டீர்களே !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories