வாட்ஸ்அப் அவதூறால் பொன்னமராவதியில் சமூகப் பதற்றம்: 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

ponnamaravathi - 2026


  • 144 தடை உத்தரவு
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் இலுப்பூர் கோட்டாட்சியர்
  • இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் காரணமாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை

இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது! பொன்னமராவதியை சுற்றியுள்ள 30 கிராமங்களில் 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்தார்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமூகத்தினருக்கு இடையே வாட்ஸ்அப் ஆடியோவில் ஒரு சமூகத்தினரை இழிவு படுத்தி பேசியதாக கூறி போராட்டம் அதிகமாக நடைபெற்று வருகிறது

இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன திருச்சி டிஐஜி பேச்சுவார்த்தை நடத்தி  அமைதி திரும்ப முயற்சி செய்தார். இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின்பேரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

பொன்னமராவதியில் இருந்து திருப்பத்தூர், திருமயம், திருச்சி மற்றும் மதுரை செல்லும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்திய ஒரு சமூகத்தினர், போலீஸார் வாகனங்கள் மீது கல்லெறிந்து கலவரம் ஏற்படுத்தினர்!

எங்கள் சமுதாயத்தை தரக்குறைவாக வாட்ஸ் அப்பில் பதிவு செய்து பரப்பிய இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்!

நேற்று இரவு பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில் கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் வந்து உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்கிறோம் என்றார் ஆனால் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்த நிலையிலும் பலனளிக்கவில்லை

தொடர்ந்து 2000க்கும் மேற்பட்டோர், அனைத்து முக்கிய வீதிகளிலும் ஊர்வலம் சென்றனர். அப்போது, 4 காவல் துறை வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது. இதில், வாகனங்கள் சேதமடைந்தன. காவலர்கள் சிலர் காயமடைந்தனர்.

திருச்சி டிஐஜி லெட்சுமி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்சி மண்டல ஐஜி வரதராஜுலு வந்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிந்து ஒப்படைப்பார் என்றும், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும் அம்மக்களிடம் கூறினார்.

இதனிடையே மரங்களை சாலைகளின் குறுக்கே போட்டு கஜா புயலால் பாதிக்கப்பட்டு சாய்ந்த பழைய மின்கங்கம்பங்களை சாலைகளின் குறுக்கே போட்டு, தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் 30 கிராமங்களில் 144 தடை உத்தரவை விதித்து, அந்தப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போலீஸார், தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

1 thought on “வாட்ஸ்அப் அவதூறால் பொன்னமராவதியில் சமூகப் பதற்றம்: 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு!”

  1. டிக் டோக் செயலியைப்போல் வாட்ஸ் ஆப், முகநூல் போன்றவற்றை எல்லாமே மொத்தமாய் தடை செய்ய வேண்டும். தேவை இல்லாத பல விஷயங்கள், ஆபாச பேச்சுக்கள், காணொளிகள், பற்பல வன்முறைகள், வீண் வதந்திகள் போன்ற பலவற்றை தூண்டும் இவைகள் மனித சமுதாயத்துக்கு செய்யும் தீமைகள் தான் அதிகம். நல்லது நடக்க வேண்டுமானால் இவற்றிலிருந்து விலகி இருத்தல் நலம். துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது தமிழ் முது மொழி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.