சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா நியமனம்

இந்தியா

acharyaஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். உதவி வழக்கறிஞராக சந்தே சௌதா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. இதை அடுத்து, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டில் விரைவில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து புதிய அரசுத் தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்தது. இந்த வழக்கில், பவானி சிங்கிற்கு முன்னர் பி.வி. ஆச்சாரியாவே அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வந்தார். ஆனால் தமக்கு ஏற்பட்டுள்ள சில அழுத்தங்களின் காரணமாக தாம் இதில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் கூறினார். புதிதாக நியமிக்கப் பட்டுள்ள அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, தனது தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஏற்கெனவே விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.