அமிதாப்புக்கு திடீர் உடல் நலக் குறைவு!

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

amitabh bacha - 2026

நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை சந்திக்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

நடிகர் அமிதாப் கடந்த 36 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து, ரசிகர் சந்திப்பை ரத்து செய்தார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமிதாப், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளேன்! ஆகையால் என்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனை அனைவரிடமும் தெரிவியுங்கள்!.. என்று கூறியிருந்தார் .

இதனால் அவரை சந்திக்க இயலாமல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.