
பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர், அதிபர், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தென்யாகு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தென்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பை பலப்படுத்துவது தொடரும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா உடனான சுமுக உறவு எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன் என்று இலங்கை அதிபர் சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துச் செய்தியில் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



