
பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், முதல் முறையாக சென்செக்ஸ் புள்ளிகள் 40 ஆயிரம் என்ற உச்சம் தொட்டு சாதனை படைத்தது.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக கூட்டணி 340-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து பங்குச் சந்தையில் தீவிரமாக இறங்கினர்.
இதை அடுத்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து 40,124 புள்ளிகள் வரை உயர்ந்தது. பங்கு சந்தை வரலாற்றில் முதல்முறையாக 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.
தேசிய பங்கு சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ.69.45 ஆனது. தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வு காணப்படுகிறது.
பின்னர் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சிறிது சிறிதாகக் குறைந்து நேற்றைய நிலைக்கு வந்தது.



