கன்னியாகுமரி சென்டிமென்ட் ‘தகர்ந்தது’ !

pon radhakrishnan - 2026

கன்னியாகுமரிக்கு என்று ஒரு செண்டிமெண்ட் இதுவரை இருந்து வந்தது. அது இந்தத் தேர்தலில் தகர்ந்துள்ளது. இந்த செண்டிமெண்ட்டை வைத்தே, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று பாஜக.,வினர் நம்பி வந்தனர். ஆனால், அது இன்று பலிக்கவில்லை!

கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சிதான் மத்தியிலும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதுதான் அந்த செண்டிமெண்ட். அதே போல், கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சி, மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று ஒரு சென்டிமென்ட் இருந்தது. அது, 2011 வரை இருந்தது. 2016-ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக., வென்றது. ஆனால், அப்போது அதிமுக., ஆட்சி அமைத்தது. அப்போது அந்த செண்டிமெண்ட் தகர்ந்தது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி முன்னர் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது. அப்போதும் இதே செண்டிமெண்ட் வேலைசெய்தது. இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சி அல்லது கூட்டணி மத்தியிலும் ஆட்சி அமைக்கும்.

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் சி.பி.எம் வேட்பாளர் பெல்லார்மின் வெற்றிபெற்றார். 2009 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றிபெற்றார். அந்தக் கட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே அமைத்தது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

அது போல், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக., பெரும் வெற்றி பெறும் என்று கூறப் பட்டது. அதே போல், இந்தத் தேர்தலில், தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்று வருகிறது.

ஆனால் கன்னியாகுமரி செண்டிமெண்ட் தகர்ந்து விட்டது. இங்கே பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories