உதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி!

Published:

Smriti Irani Amethi BJP Leader Murder Funeral Procession - 2026

அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக., தொண்டரும் அமேதியில் தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவருமான சுரேந்தர் சிங்கின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் ஸ்மிருதி இரானி.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக., தொண்டரான சுரேந்தர் சிங், அங்கெ பாஜக., சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்காக கடுமையாக பிரசாரம் செய்தார்.smriti irani in amethi - 2026

அமேதி தொகுதியில் காலணிகள் வாங்கக் கூட வசதியற்ற நிலையில் மக்கள் பலர் இருப்பதாக ஒரு கூட்டத்தில் பேசப் பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு காலணிகள் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார் ஸ்மிருதி இரானி. தேர்தலுக்கு முன்னர் பெருமளவில் காலணிகள் அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப் பட்டன. இந்த நடவடிக்கையில், சுரேந்தர் சிங் தன்னுடைய பொறுப்பில் பலருக்கு காலணிகளை விநியோகம் செய்து, அங்குள்ள மக்களிடம் நல்ல பெயரை ஏற்படுத்தினார்.

அதே நேரம், பிரியங்கா ராபர்ட் வதேரா இதை விமர்சித்தார். இது ராகுலை அவமதிப்பதற்காக செய்யப் படுவது என்றார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

கிராமத் தலைவராக இருந்து அதை விட்டு வெளியில் வந்து, ஸ்மிருதி இரானிக்காக தேர்தல் பணி செய்த சுரேந்தர் சிங், பர்லியா கிராமத்தில் பாஜக.,வின் தேர்தல் வெற்றியை கொண்டாடினார்.

smriti close aid surendrasingh - 2026இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங் லக்னௌ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

சுரேந்தர் சிங் கொல்லப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி அமேதிக்கு விரைந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, கண்ணீர் மல்க சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

இதனிடையே, சுரேந்தர் சிங்கின் கொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரம், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி,’ சுரேந்தர் சிங்கை சுட்டது யார், அவரைச் சுடச் சொன்னது யார் என கண்டுபிடித்து அந்தக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகூட பெற்றுத் தருவேன்” என்று கோபத்துடன் கூறினார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img