ஹிந்தியை அரசு அலுவல் மொழி ஆக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது, ஹிந்தி கட்டாயம் என்று பேசியதை இப்போது பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
ஹிந்தி திவஸ் என்று ‘இந்தி மொழி தினம்’ கொண்டாடியது காங்கிரஸ் அரசு.. அப்போது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஹிந்தியை தாம் வரவேற்பதாகவும் அதற்காக மகிழ்வதாகவும் கூறினார். மேலும், நாட்டின் மொழி ஹிந்தியை அரசாங்க மொழி ஆக்கவும், நாடு முழுவதற்குமான மொழி ஆக்கவும் தாம் விரும்புவதாகவும் கூறினார்.
பாஜக ஹிந்தியை திணிப்பதாக வெகுண்டெழுந்து புலம்பும் ப.சிதம்பரம் தாம் உள்துறையில் இருந்த போது உளறாமல் பேசுகிறார். இந்தியா முழுவதும் ஹிந்தியை கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் பேசுகிறார். இரட்டை வேடம் போடும் ப. சிதம்பரம் அன்று பேசியதற்கு மன்னிப்பு கேட்பாரா? அல்லது இன்று பாஜகவை விமர்சிப்பதற்கு மன்னிப்பு கேட்பாரா?




