பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிழையை கண்டுபிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன்.
மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர், வாட்ஸ்அப்பில், அதை பயன்படுத்துபவருக்கு தெரியாமல் அவரது ஆவணங்களை நீக்க முடியும் என்ற தவறை இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் கண்டுபிடித்து உள்ளார். தொடர்ந்து இதை பேஸ்புக் நிறுவனத்திற்கும் அனுப்பி, அதை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதை ஆய்வு செய்த பேஸ்புக் நிறுவனம், தவறு இருப்பதை உணர்ந்து கொண்டது. இதை கண்டுபிடித்து தங்களுக்கு தெரிவித்த ஆனந்த கிருஷ்ணனுக்கு, இந்திய மதிப்பில் 34 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பரிசினை வழங்கியுள்ளது.



