ஊழல் தடுப்பு ஆணையர் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வேலைவாய்ப்பு

upsc - 2026

மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருப்பதால், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப் பட்டுள்ளது.. இவ்வாறு நீட்டிக்கப் படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது.

ஊழல் தடுப்பு ஆணையர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது

இந்த நிலையில், இதற்கு விண்ணப்பிக்க முதலில் மே மாதம் 1ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் விண்ணப்பங்கள் மிகக் குறைவானதாக இருந்ததால், இது மே 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து அதே நிலை நீட்டித்ததால், குறித்த விழிப்பு உணர்வு ஊட்டுவதற்காக, கால அவகாசம் மீண்டும் ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஜூன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் அனுபவமுள்ள, எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாத ஐஏஎஸ், ஐபிஎஸ். ஐஎப்.எஸ் உள்ளிட்ட தகுதிகளில் உள்ள அதிகாரிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.