காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச… இதோ 90 வயதுக்காரர் தலைவராகிறார்!

rahul gandhi - 2026

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச, 90 வயது அனுபவமுள்ள தலைவர் தயாராகிவிட்டார்.

அகில காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு ராகுல் பொறுப்பேற்றார். இதனால் காங்கிரசுக்கு இளம் ரத்தம், இளம் தலைமை என அக்கட்சியினர் கொண்டாடினர். அதற்கு முன்னரே ராகுல் பிரசாரம் செய்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியையே சந்தித்தது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ராகுலின் பேச்சு எடுபடவில்லை. இதனால் பாஜக.,வின் பிரசார பீரங்கி ராகுல் காந்தி என்று விமர்சித்தனர் பலரும்!

இந்நிலையில் ராகுல் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு நிலைமை தலைகீழாக மாறிப்போனது. வெற்றிமேல், வெற்றி என நினைத்து வந்த தொண்டா்களுக்கு தோல்விமேல் தோல்விதான் கிடைத்து வந்தது. இதனால்  தொண்டர்கள் மட்டுமல்லாது, கட்சியின் மூத்த தலைவர்களும் துவண்டுதான் போனார்கள்.

motilal vora - 2026இந்நிலையில், தனது தலைமைப் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தற்போது கட்சியில் வேறு மாறுதல்கள் தேவை என்றும் ராகுல் கூறி வருகிறார். இதை அடுத்து, மோதிலால் வோரா கட்சியின் தலைவராக நியமிக்கப் படவுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அவர் இடைக்கால தலைவராக இருப்பார் என்றும், வேறு தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, காங்கிரஸின் தலைவராக அவர் இருப்பார் என்றும் கூறப் படுகிறது. இதை அடுத்து, இள ரத்தம் வற்றிப்போய் 90 வயது கிழ ரத்தம் பாய தயாராகிறது என கேலி செய்கின்றனர் காங்கிரஸின் இளையவர்கள்!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மோதிலால் வோரா  காங்கிரஸ் கட்சியில் பொருளாளராக இருந்தவா். பின்னர் வயது முதிர்வு காரணமாக பொருளாளா் பதவியை அகமத் படேலிடம் கொடுத்து விட்டு ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். இவர் காங்கிரஸின் மிக மூத்த தலைவராகத் திகழ்கிறார். மத்திய பிரதேச முதலைமச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். உத்திரப் பிரதேச ஆளநர், மத்திய அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார்.

இந்நிலையில் மோதிலால் வோரா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு அவரையே புதிய தலைவராக தேர்ந்தெடுக்க வைக்கலாம் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, எப்போது தாம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டோமோ அப்போது முதலே தாம் தலைவராக இல்லை என்றும், புதிய தலைவரை விரைவாக தேர்வு செய்யுங்கள் என்றும்  கூறினார் ராகுல். தாம் ராஜனாமா கடிதத்தை வழங்கிவிட்டதால் தாம் தலைவா் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், காங்கிரஸ் செயற்குழு இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியிருந்தார். இந்த நிலையில், மோதிலால் வோராவின் பெயரை காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்திருக்கிறது.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories