15 ஆவது தலாய் லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர்!

Published:

talai lama e1562738165564 - 2026

15 ஆவது தலாய்லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர் நியமிக்கப் பட்டுள்ளார். இது, 14வது தலாய் லாமா சொன்னபடியே நடந்தது என்கிறார்கள்.

மூன்று மாதங்கள் முன் ஒரு பன்னாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள பௌத்த குருவான 14வது தலாய் லாமா பேசுகையில் தனக்குப் பிறகு வரும் வாரிசு பாரத தேசத்தில் பிறப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இதன் படி, அடுத்த வாரிசை தேர்ந்தெடுத்தார் 14வது தலாய் லாமா! புதிய வாரிசுக்கு 15 ஆண்டுகள் மத விஷயங்கள் குறித்த கடுமையான பயிற்சி அளிக்கப் போகிறார்கள்.

அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கல்வி நிலையத்தில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ‘தேவாவங்க்டி’ அடுத்த குருவாகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். பதினைந்தாவது தலாய் லாமா தேவாவங்க்டியின் பிறந்த ஊர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டார்ஜிலிங்.

இவரது  தந்தை பிரேமவங்க்டி. தாய் பஞ்சுராய். புட்டபர்த்தி சத்ய சாய் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தேவாவங்க்டியை பல கோணங்களில் பரிசீலித்து தேர்வு செய்துள்ளார்கள். அவனுடைய பெற்றோரைச் சந்தித்த பௌத்த குருமார்கள், அவர்களை சம்மதிக்கச் செய்து விட்டார்கள்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

அண்மையில் புட்டபர்த்தி வந்திருந்த பௌத்த மத பிரதிநிதிகள் வங்க்டியை தம்மோடு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு மைசூர் அருகில் உள்ள “பைலுகுப்பே பௌத்த ஆராமம் (golden temple)ல் பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.  பயிற்சிகள் முடித்த பின்பே 15ஆவது தலாய் லாமாவாக அதன்பின் அவர் பொறுப்பேற்பார்.

தன்னை சாய்ராம் என்று அழைத்தால் பதிலளிப்பதாக தன் நண்பர்களுடன் விடை பெறும்போது கூறிச் சென்றுள்ளார் இந்தச் சிறுவன். முன்னதாக, தனக்குப் பின்னர் அடுத்த வாரிசு இந்தியாவில்தான் பிறப்பான் என்று 84 வயதான 14வது தலாய் லாமா கூறியிருந்தார். அதுவே நிகழ்ந்துள்ளது. ஆனால் புதிய தலாய் லாமாவை சீன அரசு அங்கீகரிக்க வேண்டியுள்ளது. சக்கரவர்த்திகள் காலம் முதல் இதுவே வழக்கம்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img