spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்வியாஸ பூர்ணிமா பற்றி தெரியுமா?

வியாஸ பூர்ணிமா பற்றி தெரியுமா?

srinkeri 1ஶ்ருங்கேரி வைபவம் 3 ஶ்ரீமடத்தில் நடக்கும் வியாச பூஜையில் , ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அடுத்தபடியாக ஆராதிக்கப்படுபவர் ஶ்ரீ வியாஸ பகவான் .

வேத ,வேதாந்தங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி , பதினெண் புராணங்கள் , மஹாபாரதம் , அதன் அங்கங்களான ஶ்ரீமத்பகவத் கீதை, ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அனைத்தையும் ஆக்கித்தந்தவர் . viyasar 1ஶ்ரீபராசர முனிவர் நதியைப் படகில் கடந்து கொண்டிருக்கும் பொழுது தனது மகனாக மாபெரும் யோகி ஒருவர் உதிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவப்பெண் ஸத்யவதியை அக்கணமே மணந்து கொண்டார் .

நதியின் நடுவிலுள்ள தீவில் அந்த மஹானாகிய வியாஸபகவான் அவதரித்தார் . தீவில் பிறந்ததால் த்வைபாயனன் என்ற பெயரும் இயற்பெயராக ஶ்ரீகிருஷ்ண என்ற பெயரும் ஏற்பட்டது .

ஶ்ரீகிருஷ்ணத்வைபாயனர் வியாசபகவானாக பரிணமித்த பொழுது அவர் தவப் பெரும் செல்வத்தை உடையவராய் இருந்தார் . பிரஹ்ம ஞானம் பிறக்க வழி செய்யும் ப்ரஹ்ம சூத்ரம் போன்ற பல நூல்கள் தோன்ற வழி செய்ததால் ப்ரஹ்மநிதி என்றும் அழைக்கப்படுகிறார்.  athisankaraiஶ்ரீசங்கரபகவத்பாதாள் காசி க்ஷேத்திரத்தில் பல செயற்கரிய செயல்களைச் செய்து கொண்டிருந்தார் . அவருக்கு முதலில் எட்டு வருடம் ஆயுள் என்று ஏற்பட்டிருந்தது . முதலை வாயிலிருந்து விடுபட்டு துறவறம் மேற்கொண்ட பொழுது, ஆயுள் இரட்டிப்பாகி பதினாறு ஆகியது .

அப்பொழுது ஶ்ரீவியாசபகவான் அந்தணக் கிழவர் வேடத்தில் ஶ்ரீசங்கரரைச் சந்தித்தார் . ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு உரை எழுதியிருந்த பதினாறு வயது இளைஞனை பல விதத்தில் கேள்விகேட்டு சோதித்தார் . ஶ்ரீ சங்கரர் அனைத்திற்கும் அழகாக விடையிளித்தார் . மிகவும் மகிழ்ச்சி அடைந்த வியாச பகவான் அவரது ஆயுளை(32வயதுவரை)இரட்டிப்பாக்கி ஆசீர்வதித்தார் .

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி வியாச பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜீலை 16 ம் தேதி வருகிறது.

வ்யாஸாய , விஷ்ணு ரூபாய , வ்யாஸ ரூபாய விஷ்ணவே | நமோவை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe