உத்திரபிரதேச மாநிலத்தில் மே 13 ஆம் தேதி அமித், அஞ்சனா என்ற இருவருக்கும் திருமணம் நடந்தது.இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், கடந்த வாரம் அவர்கள் வீட்டீல் நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதனால் அதற்காக அஞ்சனா தன் கணவரிடம் புதிதாக ஒரு புடவை வாங்கித் தருமாறு கணவனிடம் கேட்டுள்ளார்.
மனைவி கேட்ட புடவையை வாங்கித்தருவதற்கு கணவன் அமித் மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமித் வெளியில் சென்றுவிட்டார். ஆனால் கணவன் தனது ஆசையை நிறைவேற்றவில்லை என்ற மனவேதனையில் அஞ்சனா, தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.
வெளியில் சென்றிருந்த அமித் வீடு திரும்பியபோது மனைவி அஞ்சனா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறல் சத்தம் போட்டுள்ளார் அமித்.இதனையடுத்து அஞ்சனவின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மகள் இறந்ததை அறிந்த அஞ்சனவின் பெற்றோர் கதறி அழுதபடி அமித்தின் வீட்டிற்கு சென்று, அமித் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டதாக, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அஞ்சனாவின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



