மும்பை: தங்கள் ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் வழக்குவதற்காக, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், தற்போது ரூ.2,628 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் இந்தியாவின் பங்கு பரிவர்த்தனைச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, டிசிஎஸ் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் வழங்க உள்ளது. இதற்காக ரூ.2,628 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்திய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் மிகப் பெரிய ஒன் டைம் போனஸ் இதுதான். டிசிஎஸ்ஸில் தற்போது பணிபுரியும் 2.5 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எதிர்பாராத பரிசுமழையாக அமைந்துவிட்டது. அதுவும் இந்த ஒன் டைம் போனஸை ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கொடுக்க உள்ளது ஊழியர்களுக்கு ஓர் அதிசய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். வருடத்துக்கு ஒரு வார சம்பளத்தை கணக்கிட்டு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் டிசிஎஸ் நிறுவன கிளைகளில் சுமார் 3,00,000 பேர் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்தில் குறைந்தது ஓர் ஆண்டு பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் இந்த போனஸ் பெறத் தகுதி பெற்றவர்கள் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒன் டைம் போனஸ்: டிசிஎஸ் ஒதுக்கியது ரூ.2,628 கோடி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari