காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கடும் கண்டனம்…!

 

milttari - 2026

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கானில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

2020-ல் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடவிரும்பும் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் படைகளை ஆப்கானிலிருந்து திரும்ப பெற நடவடிக்கையை மேற்கொள்கிறார்.

இதுவரையில் தலிபான்களுக்கு உதவிய பாகிஸ்தான், இனி தனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்பியது.

காஷ்மீர் விவகாரத்தில் தலிபான் தன்னுடன் கைக்கோர்க்கும் என பாகிஸ்தானுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்போது அமெரிக்க படைகள் வெளியேறுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகவே அமையும் என வல்லுநர்களின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில் தலிபான்களிடம் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில்கூட மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். காபூலில்கூட அமைதி நிலவுகிறது.

ஆனால் காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. நாம் என்ன மாதிரியான ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம் என்றார்.

ஆப்கானிஸ்தானில்கூட அமைதி வந்துவிட்டது ஆனால் காஷ்மீரில் இன்னும் அமைதி வரவில்லை என்றார்.

இதற்கு தலிபான் அமைப்பு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

தலிபான் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதாக செய்தி கிடைத்தது.

அங்கு படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் மக்கள் பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

அங்குள்ள சூழல் குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுக்கும் முடிவுகள் அப்பகுதியில் வன்முறை, குழப்பத்துக்கு இட்டுச்செல்லாத வகையில் தடுக்க வேண்டும்.

சட்டப்பூர்வமாக காஷ்மீர் மக்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

சில கட்சிகள் ஆப்கானிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசுகிறார்கள்.

இது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் காஷ்மீருக்கு தொடர்பில்லாதது.

இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்தும் மேடையாக ஆப்கானிஸ்தானை மாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் ஜாஹித் நசருல்லா பேசுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது நடக்கும் அமைதி ஒப்பந்த முயற்சி காஷ்மீரில் பாதிப்பை ஏற்படுத்தாது.

துரதிர்ஷ்டவசமாக காஷ்மீர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories