வெள்ளத்தில் தரைமட்டமான வீடு ! இருவர் உயிரழப்பு !

இந்தியா பொது தகவல்கள்

uthrakant - 2026உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி, டெஹ்ரி  மாவட்டங்களில் கனமழை தீவிரமாக பெய்து வருவதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமோலி மாவட்டத்தில் உள்ள லங்கி  என்ற கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடு ஒன்று இடிந்து தரைமட்டமானது. அதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

கனமழை வெள்ளம் காரணமாக உத்தரகாண்டில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக எச்சரிக்கப்பட்ட பின்னர் மாநில பேரிடர் பதிலளிப்பு படை  சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.