ஐந்தருவியில் … கற்கள் தலையில் விழுந்து இளம்பெண் உள்பட 3 பேர் காயம்!

சற்றுமுன் சுற்றுலா நெல்லை
fivefalls stone - 2026

குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேருக்கு தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப் பட்டது. அருவி நீரில் கற்கள் அடித்து வரப்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப் பட்டது.

அருவியில் ஜாலியாக குளித்துக் கொண்டிருந்த கவின் என்ற கல்லூரி மாணவி உள்ளிட்ட 3 பேர் தலையில் சிறு சிறு கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக முதலுதவி அளிக்கப் பட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

அருவில் நீர் ஆக்ரோஷமாக இருந்ததாலும், அருவி நீரில் கற்கள் சேர்ந்து விழுந்ததாலும், போலீஸார் ஐந்தருவியில் குளிக்க அனுமதி மறுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.