
சேலத்தில் பியூஷ் மானுஷ் என்பவர் சமூக செயற்பாட்டாளர் என்ற பெயரில் இயங்கி வருகிறார். இவர் புதன் கிழமை நேற்று மாலை 5 மணி அளவில் பாஜக., அலுவலகத்துக்குள் நுழைந்து தகராறு செய்து, அடிவாங்கினார். இதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு திமுக., தலைவர் ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு பாஜக.,வினர் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தமிழக பாஜக., வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…
திமுக @arivalayam த்தின் படிகளில் நின்று கேட்க எண்ணற்ற கேள்விகள் உள்ளன
1. வீராணம் ஊழல் முதல் 2G வரை
2. தா.கிருட்டினன் முதல் சாதிக் பாட்சா கொலை வரை
3. கச்சத்தீவு முதல் ஈழத்தமிழர் துரோகம் வரை
4. ஹிந்து மத வெறுப்பு
5. பிரிவினைவாத ஆதரவு
6. நிலஅபகரிப்பு வழக்குகள்
7. சாராய ஆலைகள்
8. கிரிமினல் ஆதாய கூட்டணிகள்
9. ஓசியில் அடித்து பிடுங்கும் ரவுடியிஸம்
10. கல்வி கொள்கையில் இரட்டை நாடகம்
11. ஊடக வன்முறை என்று பட்டியல் நீளும்
ஆனால் இவையெல்லாம் கேட்க பொதுவெளியே போதும், திறந்த வீட்டினுள் அத்துமீறி நுழையும் திமுகவின் கைக்கூலிகள் அல்லவே நாங்கள் ! – என்று தமிழக பாஜக., டிவிட் செய்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு பாஜக., அலுவலகத்துக்குள் புகுந்து திமுக.,வினர் நடத்திய தாக்குதலை மறந்துவிட முடியாது என்கின்றனர் பலர். அந்த வீடியோக்களையும் பகிர்ந்துவருகின்றனர்.
ஆளும் கட்சியாக இருந்து கொண்டு எதிர்க் கட்சியின் அலுவலகத்தைக் கற்களால் தாக்கியும், ரவுடிகளைக் கொண்டு அடித்துத் தாக்கிய திமுக,வினரின் காட்டுமிராண்டித் தனமான செயல்பாடுகள் தான் ஜனநாயகம் போலும் என்று கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.
என்ன இருந்தாலும், தங்கள் கட்சியின் ஊதுகுழல் பத்திரிகையான தினகரன் அலுவலகத்துக்குள் புகுந்து பணியாளர்கள் மூன்று பேரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தியவர்கள்தானே இந்த ஜனநாயகப் புலிகள் என்று கூறுகின்றனர் சமூக வலைத்தளங்களில்!