சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் தொடர்பான இ-சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மையம் செயல்படும். இதனை தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், வருமானவரிச் சான்று, சாதிச் சான்று, பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, நிரந்தர இருப்பிடச் சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று போன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதார் அடையாள அட்டைக்கும் இந்த மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர் நீக்குதல் போன்ற வாக்காளர் அடையாள அட்டைக்குத் தேவையான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் சேவையும், கூடுதலாக நேற்று முதல் இந்த மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கூடுதல் சேவையை சென்னை மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறிய தகவல்: தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அரசு பொது இ-சேவை மையங்களில், இன்று முதல் வாக்காளர் அடையாள அட்டைக்கு பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர்களை நீக்குதல், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் விட்டு போனவர்கள் மீண்டும் விண்ணப்பித்தல் போன்ற சேவைகளுக்கு உரிய படிவங்களை இந்த மையங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீதுகள் வழங்கப்படும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அதற்கான தீர்வுகள் எட்டப்படும். சேவைக்கு தகுந்தாற்போல், குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் இறுதிப் பட்டியல் 2016 மார்ச் மாதம் வெளியிடப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு இ-சேவை மையம் தொடக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week