நான் வெற்றி பெற்றால் முதல்வர் ஊரை விட்டு ஓடிவிட வேண்டும்: நான் ரெடி நீங்க ரெடியா ரேஞ்சில் ஸ்டாலின்!

சற்றுமுன்
stalin stage - 2026

தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது

குறிப்பாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலினும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்

edappadi palanisamy - 2026

இந்த நிலையில் இன்று நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த முக ஸ்டாலின், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை மக்களின் முதல்வர் என்று கூறிக் கொள்கிறார். அவர் விபத்தில் தான் முதல்வர் ஆனார் என்று கூறினால் அதற்கு அவர் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்.

அவர் உண்மையிலேயே மக்களின் முதல்வர் என்பதை நிரூபிக்க அவருக்கு நான் ஒரு வாய்ப்பு தருகிறேன். முதல்வர் பழனிசாமி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடட்டும். நானும் ராஜினாமா செய்கிறேன். இருவரும் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம்

நான் வெற்றி பெற்றால் முதல்வர் பழனிசாமி ஊரை விட்டு ஓடிவிட வேண்டும். அவர் வெற்றி பெற்றால் அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன் ‘என்று சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.