தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
Rain forecast Chennai 1 - 2026

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, தருமபுரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதத்தில் கிடைக்க வேண்டிய 9 செமீ., மழையில் இதுவரை 8 செமீ., மழை கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Regional Meteorological Center 1 1 - 2026

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை அயனாவரத்தில் 13 செமீ., மழையும், பெரம்பூர், நீலகிரி கே.பிரிட்ஜ் பகுதிகளில் தலா 12 செமீ., மழையும், நுங்கம்பாக்கத்தில் 10 செமீ., மழையும் பதிவாகியுள்ளது. குன்னூரில் 8 செமீ., பொள்ளாச்சியில் 7 செமீ., மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.