
ஜம்மு : ஏற்பாடுகள் மும்முரம்… ஜம்மு-காஷ்மீர் தலைநகரை ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இமயமலையின் மேற்கு பகுதியில் இருக்கும் ஸ்ரீநகரில் குளிர்காலத்தின்போது அதிக பனிப்பொழிவு இருக்கும். அதேநேரத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஜம்மு நகரில் இதமான சூழல் நிலவும்.
இதை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் குளிர்காலத்தின்போது ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு மாற்றப்பட்டு வருகிறது. 19ம் நூற்றாண்டிலிருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு குளிர்காலம் நெருங்குவதால், மாநில தலைநகரை ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கும் ஆவணங்கள், ஜம்முவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.