
போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு எதிரான பணிமுறிவு நடவடிக்கை திரும்ப பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் உறுதி அளித்தப்படி தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் 7 நாட்களாக தொடர்ந்து பணிக்கு வராததாக கருதி, அவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வர், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்தனர். போராட்டத்தை வாபஸ் பெற்றதால், அவர்கள் மீது அரசு தரப்பில் எடுக்கப்பட்ட பணி முறிவு நடவடிக்கையும் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்திருந்த பணி முறிவு (Break in Service) உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) November 1, 2019
மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். #TNGovt #TNHealth pic.twitter.com/44uXMCS4sF