
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கயாஸ் முகமது. முதுகலை பட்டம் பெற்ற இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அம்பத்தூர் எஸ்டேட்டில் தனது நண்பர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார் முகமது.
கயாஸ் மீது அவரது பெண் தோழி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் கயாஸ் முகமது பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமதுவை விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கயாஸ் முகமது ஆபாச வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு பெண்களின் உடல் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பேருந்து, ரயில் நிலையம், அலுவலகம் என எங்கு சென்றாலும் பெண்களை ஆபாசமாக வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து அதை தவறாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்துள்ளார். தன்னை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக பல போலி ஐடிகளை உபயோகித்து வந்துள்ளார்.
எந்த ஆபாச படத்திற்கும் வீடியோவிற்கும் அதிக பார்வையாளர்கள் உள்ளார்களோ அதன் கீழே பல ஆபாச கமெண்ட்களையும் பதிவிட்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது வீட்டில் உள்ள பெண்களையும் ஆபாசமாக படம் பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார் கயாஸ் முகமது.
இந்நிலையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கயாஸ் மீதான குற்றச்சாட்டை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.