
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக பால் முகவர்கள் சங்கம் சார்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிகர், நடிகைகள் நடிக்கவும், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சங்கத்தின் நிறுவனரும் மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன் தலைமையில் இன்று மாலை 3 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அப்போது தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நலவாழ்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் கமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் படப்பிடிப்பில் இருப்பதால் மனுவை நடிகர் சங்க மேலாளர் பாலமுருகன் பெற்றுக் கொண்டு உடனடியாக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறினார்.

அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது….
‘இணையதள (ஆன்லைன்) வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களிலோ, அதனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளிளோ பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு தடை விதிக்க வேண்டுகோள்.
உயர்திரு தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களுக்கு வணக்கம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட ‘உலகமயமாக்கல் கொள்கையினால்” இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததினால் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் நமது இந்தியாவில் வணிகம் செய்ய காலடி பதித்த காரணத்தால் தற்போது சிறு, குறு, நடுத்தர சுதேசி வணிக நிறுவனங்களும், சில்லறை வணிக நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு, முற்றிலுமாக நமது தொழில் நலிவடைந்து அவை குற்றுயிரும் குலையுயிருமாய் இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கின்றன.
சிறு, குறு, நடுத்தர சுதேசி வணிக நிறுவனங்கள் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள் அனைத்தும் தற்போது இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, முற்றிலுமாக தொழில் நலிவடைந்து போயிருக்கின்ற சூழ்நிலையில் நமது தேசத்திற்கு வாpகள் மூலம் மிகப்பொpய வருவாயை ஈட்டித்தரும் லட்சக்கணக்கான வணிகப்பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதோடு, அவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் அண்மைக்காலமாக ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தையே விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு வரும் இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்திற்கு மேலும் வலுச்சேர்த்து, ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘மண்டி” எனும் இணையதள (ஆன்லைன்) ‘வர்த்தக செயலி” விளம்பரத்தில் முன்னணி தமிழ் நடிகரான திரு விஜய் சேதுபதி அவர்கள் நடித்திருப்பது கோடிக்கணக்கான சுதேசி வணிகப் பெருமக்களின் நெஞ்சில் தீராக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக இருந்து வரும் திரு விஜய் சேதுபதி அவர்கள் இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான ‘மண்டி” எனும் ‘வர்த்தக செயலி” விளம்பரத்தில் நடித்ததின் மூலம் ஏற்கனவே வணிகத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சிறு, குறு, நடுத்தர சுதேசி வணிக நிறுவனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான வணிகப் பெருமக்களின் நெஞ்சில் வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சியுள்ளார்.
ஏற்கனவே ‘வீடியோ பைரசி” எனப்படும் இணையதளம் (ஆன்லைன்) மூலமும், திருட்டு விசிடி மூலமும் பொதுமக்கள் திரைப்படத்தை பார்ப்பதால் திரைத்துறையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாhpப்பாளர்கள் தொடங்கி அடிமட்ட ஊழியர்கள் வரை என ஒட்டு மொத்த திரையுலகமும் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறது என அவற்றுக்கு எதிராக போராடி, போர்க்கொடி தூக்கி, மத்திய, மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு, பொதுமக்கள் இணையதளம் (ஆன்லைன்) வாயிலாக திரைப்படங்கள் பார்ப்பதை கைவிட வேண்டும் என கோhpக்கை வைத்த முன்னணி தமிழ் நடிகர்களே சுதேசி சில்லறை வணிகத்தை அழிக்கும் இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது வேதனையளிக்கிறது.
இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்தில் ‘தங்களுக்கு (திரையுலகிற்கு) வந்தால் மட்டும் அது இரத்தம்” எனவும், அதுவே ‘பிறருக்கு (சில்லறை வர்த்தகத்திற்கு) வந்தால் மட்டும் தக்காளிச் சட்னியாகவும் முன்னணி நடிகர்கள் பாவித்து பணத்திற்காக இணையதள (ஆன்லைன்) வர்த்தகத்திற்கு ஆதரவாக துணை போவதை ஒருநாளும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே இணையதள (ஆன்லைன்) வர்த்தகம் தொடர்பான எந்த ஒரு விளம்பரங்களிலோ அல்லது அதனை ஊக்கு விக்கும் நிகழ்ச்சிகளிளோ எந்த ஒரு நடிகர், நடிகைகளும் இனி பங்கேற்க கூடாது என அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், ‘மண்டி” எனும் இணையதள (ஆன்லைன்) வர்த்தக ‘செயலி” விளம்பரத்தில் நடித்துள்ள முன்னணி தமிழ் நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் அதன் விளம்பர ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக் கொள்ளவும், ‘மண்டி” விளம்பரத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்துமாறும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.



