December 6, 2025, 1:25 AM
26 C
Chennai

இமயமலையில் நடத்தப்படும் இமாலய சாதனை

இமயமலையில் நடக்கும் ஒரு இமாலய சாதனை!
மோடி அரசு எத்தனையோ சாதனைகளை செய்து வருகிறது. அதை எல்லாம் விட இமயமலையில் தேவபூமியான ரிஷிகேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இருவழி சாலைகள்தான் மிக முக்கியமானது.
இந்து மதத்திற்கும் இமயமலைக்கும் உள்ள தொடர்பு இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஏனென்றால் இமயமலையில்  காற்று ஒலித்துக் கொண்டிருக்கும் 'ஓம்' என்கிற சத்தத்தை விட அங்கு செல்லும் மக்கள் ஒலிக்கும் ஹர ஹர மகாதேவா என்கிற சத்தம்தான் காற்றின் ஒலியையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
இந்த ஹர ஹர மகாதேவா கோஷம் இமயமலையில் மட்டுமல்ல அது இந்தியா முழுவதும் இனி கேட்க வேண்டும் அதற்கு நிறைய பக்தர்களை வரவழைக்க வேண்டும்
என்று நினைத்த மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் "சார்தாம்" யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  இருவழி சாலைகளை 12,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது  இந்த சார்தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் 5000 க்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்துபோனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மோடி அரசு நினைத்து அதற்க்கான செயல் திட்டங்களில் இறங்கியது.
இதற்காக 13 பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து 2 சுரங்கப்பாதைகளை அமைத்து 25 பாலங்களை உருவா க்கி 3 மேம்பாலங்களை கட்டி 154 பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பாக்கி இமயமலையெங்கும் 11,000 அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது மோடி அரசு. இதற்கான துவக்க விழா இன்று ஆரம்பித்தது. 7 பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிடும்.
இந்த பாரத நாட்டில் தான் எத்தனை  மத நம்பிக்கைகள். எத்தனை யாத்திரைகள்.யார்  தொடங்கி வைத்தார்கள்? எப்பொழுது தொடங்கி வைத்தார்கள்? என்றே தெரியாமல்
இந்த மண்ணில் காலம்காலமாக இன்றும் மக்களை இயக்கி வைத்துக்கொண்டு இருக்கும் இந்த நம்பிக்கைகளை வழி நடத்தி செல்வதே ஒரு அரசாங்கத்தின் உண்மையான கடமையாகும்.
அந்த விதத்தில் மோடி அரசாங்கம் இந்துக்களின் எண்ணங்களை செயலாக்கி  கொண்டே வருகிறது. இந்துக்களின்
புண்ணியபூமி தனுஸ்கோடியில் புயலினால் அழிந்து 52 வருடங்களுக்கு பிறகு மோடி ஆட்சியில் தான் ரோடு போடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நான்கு வழி சாலை திட்டம் இந்த வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.
இதெல்லாம் விட  உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படுத்தப்போகும், பேரிடரிலும் அழியாத இரு வழிச் சாலை அது தாங்க மோடி அரசின் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாது. கடும் பனி சூழ்ந்த மலைகளை குடைந்து சுரங்கம் உருவாக்கி மேம்பாலம் கட்டி அதுவும்
பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதியான அங்கே 10,000 அடி உயரத்தில் அனைத்து பேரிடர்களையும் தாங்கக்கூடிய இரு வழி சாலைகளை அமைக்க இருப்பது சாமானிய
வேலையா? சொல்லுங்கள்.
இந்த இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரை மிக புகழ் பெற்றது. இந்த சோட்டா சார்தாம் யாத்திரை உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடரில் உள்ள யமுனோத்ரி கங்கோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் என்ற  நான்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்வதையே உத்தரகாண்ட் யாத்திரை அல்லது சோட்டா சார்தாம் யாத்திரை என்று சொல்கிறார்கள்.
இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரை சார்தாம் யாத்திரையாகும். இந்த சார்தாம் யாத்திரையில் இரண்டு உள்ளது. ஒன்று தெற்கே ராமனாதரையும் மேற்கே துவாரக நாதரையும் வடக்கே பத்ரிநாதரையும் கிழக்கே ஜெகனாதரையும் ஒரே நேரத்தில் சென்று தரிசிப்பதே சார்தாம் யாத்திரையாகும். இந்த யாத்திரையை ஓவ்வொரு இந்துவும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தர்மம் சொல்கிறது. இது தான் பெரிய சார்தாம் யாத்திரையாகும்.
இதே மாதிரி வட இந்தியாவில்  உத்தரகாண்ட் மாநிலத்தில்  இமயமலையில் ஒரு சார்தாம் யாத்திரை உண்டு. இதற்கு பெயர் சோட்டா சார்தாம் யாத்திரை யாகும். இந்த யாத்திரையில் ஆதி சங்கரர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே ஈடுபட்டுள்ளார்.
 
இந்த சார்தாம் யாத்திரையில் முதலில் உள்ள யமுனோத்ரி கோயில் யமுனை நதி உற்பத்தியாகி வரும் இடத்தில் உள்ளது. இந்த யமுனை நதியில்தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம்பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான கருப்பு வண்ணமா கவே உள்ளாள். . கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை நதியாகும்.. யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத் திலிருந்து 3293 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது
அடுத்து கங்கோத்ரி கடல் மட்டத்தில் இருந்து 3415 மீட்டர் உயரத்தில்  அமைந்துள்ளது. கங்கோத்ரி கோயில்தான்  கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம் . இந்த கோயில் பகீரதன் காலை ஊன்றி  கங்கையை பூமிக்கு வர வேண்டி தவம் செய்த இடத்தில் தான் அமைந்துள்ளது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேதயாகம் செய்ததாக கங்கோத்ரி வரலாறு சொல்கிறது.
அடுத்து கேதார்நாத் ஆலயம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரபதிகம் பாடப்பட்ட தலம் இது. அதோட  பாரததேசமெங்கும் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இந்த கேதாரீஸ்வரர் தான். கடல் மட்டத்திலிருந்து 3553 மீட்டர் உயரத்தில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில், மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் ருத்ர இமய மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்குதான் ஆதிசங்கரர் முக்தி அடைந்த இடம் உள்ளது பரசு ராமர் வழி பட்ட தலம் இது. 
அடுத்து கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் நர நாராயண சிகரங்களுக்கிடையில் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் பத்ரிநாத்  அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம்  செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுள் பத்ரிநாத்தும் ஒன்று இங்கே ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது. இங்கு தான் வியாசர் குகை விநாயகர் மகாபாரதம் வடித்தது போன்ற இந்து தர்மத்தின் ஆதார சம்பவங்கள் அரங்கேறிய இடங்கள் உள்ளது.
இப்படி இந்துக்களின் வாழ்வில் புண்ணியம் சேர்க்கும் இந்த இடங்களுக்கு மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தான் மக்கள் யாத்திரை செல்வார்கள்..ஒரு
வருட யாத்திரியில் குறைந்தது 30 லட்சத்திற்கும் மேலாக மக்கள் சென்று கொண்டிருக்கும் இந்த புனித யாத்திரையை மேம்படுத்துவதே ஒரு உன்னதமான அரசின் நோக்கமாக இருக்க முடியும். இதை தான் மோடி அரசு செய்து வருகிறது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories