மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களிடம் ரூ.3.54 கோடி கையிருப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது. இதைப்போல பகுஜன் சமாஜ் கட்சியிடம் ரூ.26.59 லட்சமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியிடம் ரூ.88 ஆயிரத்து 468–ம் கையிருப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் நிதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் எதுவும் வெளியிடவில்லை. இந்த கட்சிகள் தங்கள் நிதி நிலவரம் குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.இதைப்போல ஆம் ஆத்மி, அசாம் கணபரிஷத், ஐக்கிய ஜனதாதளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட மாநில கட்சிகளும் 2015–16–ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது*
*ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளுக்கு மத்திய வரி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இன்று அவர்கள் கருப்பு பட்டை அணிகிறார்கள்
*பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகளை கட்டுவதற்கு கேரள அரசு தீவிரம்
*ஜல்லிக்கட்டு போராட்டத்தை வேடிக்கை பார்க்க மெரினாவுக்கு சென்ற சிறுவன் மாயம். சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. அப்பகுதியில் பூ வியாபாரம் செய்யும் இவர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை வேடிக்கை பார்க்க என்னுடைய மூத்த மகன் ஆகாஷ்(வயது 16) கடந்த 20–ந் தேதி என்னுடைய தாயாருடன் சென்றான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் மகனை திடீரென காணவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மெரினா கடற்கரைக்கு சென்று பல இடங்களில் தேடினேன். என் மகன் கிடைக்கவில்லை. மெரினா கடற்கரையில் தொடர் போராட்டம் நடந்ததால், போராட்டக்காரர்களுடன் என் மகனும் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த 23–ந் தேதி வன்முறை சம்பவம் கடற்கரையில் நடந்தது. அதன்பின்னரும் என் மகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால், என் மகனின் நிலை கண்டு பயமாக உள்ளது. என் மகனை கண்டுபிடித்து தரக்கோரி மெரினா கடற்கரை போலீசில் புகார் செய்தும் எந்த பயனும் இல்லை. எனவே, என் மகனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் கமிஷனருக்கும், மெரினா இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்
* மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த ராஜேஷ் சாவந்த் மும்பையில் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தார்
*கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறேன்: முலாயம் அதிரடி
*பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனுப்பும் எத்தகைய கடிதத்தையும், அரசு துறைகள், 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்குள் தக்க பதில் அனுப்பப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த நடைமுறையில் தாமதம் ஏற்படும் என தெரிந்தால், இடைக்கால பதில் ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும். அந்த பதிலில், சரியான தீர்வு எப்போது அளிக்கப்படும் என்பதற்கான தேதியை குறிப்பிட வேண்டும். எம்.பி.,க்கள் அனுப்பும் கடிதங்கள், அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள் உள்ளிட்டவற்றை முறையான ஆவணங்களாக பராமரிக்க வேண்டும்.இந்நிலையில், தாங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு குறித்த காலத்தில், அரசு துறைகள் பதில் அனுப்புவதில்லை என குற்றஞ்சாட்டி, எம்.பி.,க்கள் சிலர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, இவ்விவகாரத்தை உயரதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.இது தொடர்பாக, வடகிழக்கு மாநிலங்கள் விவகாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், அனைத்து அரசு துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எம்.பி.,க்கள் அனுப்பும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
*வரும் புதன்கிழமை பிப்.1 ல் மத்திய பட்ஜெட் தாக்கல் எப்படி இருக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்பினர் பல்வேறு எதிர்பார்ப்புகளை நோக்கியுள்ளனர்.கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு நிறுவனங்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். சைமா , கிமா, இந்திய தொழில் வர்த்தக சபை , காட்மா, டேட், கோக்மா, காஸ்மோபேன் உள்ளிட்ட தொழில்துறை அமைப்பினர் பட்ஜடெ் எப்படி இருக்க வேண்டும் என கேட்ட போது சில விஷயங்களை இங்கு வெளியிட்டுள்ளோம்.வரிச்சலுகை , ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கும் ஏதேனும் அறிவிப்புகள், குறுந்தொழில் பேட்டை அமைத்தல் , வங்கி கடன் அதிகரிப்பு, வட்டிவிகிதம் குறைப்பு , வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம் நீட்டிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தரப்பரிசோதனை கூடம் , உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்
*சென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு இரவு ரோந்து பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் 1281 பேரையும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 5 பேரும், பழைய குற்றவாளிகள் 5 பேர் என மொத்தம் 1,291 பேரை கைது செய்தனர். மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 88 பேர் போலீசாரிடம் சிக்கினர்
*இந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி தேவைப்படுகிறது என தொழுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வையில் தொழுநோயை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மகாத்மா காந்தி தொடர்ந்து அக்கறை காட்டினார் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்
*தடுப்பணை கட்டுவதை தடுக்க கேரள முதல்–மந்திரியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசவேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
*போதை பொருளை பதுக்கி வைத்திருந்ததாக பதிவு செய்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பூந்தமல்லி, மல்லியம் நரசிம்மன்நகரில் ஒரு வீட்டில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக ‘ஹெராயின்’ போதைப் பொருளை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார், கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் 18–ந் தேதி அந்த வீட்டை சோதனை நடத்தினார்கள்.அந்த வீட்டில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக 84 ‘டப்பாக்களில்’ உயிருடன் மீன்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ‘டப்பாக்களை’ போலீசார் சோதனை செய்தனர். மீன்கள் உள்ள தண்ணீருக்குள் ‘பாலித்தீன் கவர்களில்’ மர்ம பொருள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்
*ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பேட்டி
*தமிழகத்தின் நலனுக்காக முதல்- அமைச்சரின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது சரத்குமார் பேச்சு
*திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
*சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு
*மாணவர்கள் மீதான தடியடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
*அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர், பயல் மோடி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது வகுப்பறையில் உள்ள வெள்ளை நிற போர்டில், ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. அப்போது அவர் டிரம்பை தண்ணீர் துப்பாக்கியால் சுட்டு, ‘செத்துப்போ’ என கத்தினார். இது ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
*‘‘பஞ்சாப் முதல்–மந்திரி பாதலை சிறையில் தள்ளுவேன்’’ அமரீந்தர்சிங் மிரட்டல்
*உலகிலேயே இளம்வயதினரை கொண்ட நாடு என்று பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டை பெருமிதத்துடன் கூறி வருகிறார். இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பு, ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.உலக அளவில் மக்கள் தொகை, வயது தொடர்பான சில சுவாரசியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:–
* 2020–ம் ஆண்டில் உலக அளவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து விடும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை அவர்களின் எண்ணிக்கை விஞ்சி விடும்.
* 2050–ம் ஆண்டில், 60 மற்றும் அதற்கு அதிகமான வயதினை கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 200 கோடியை எட்டி விடும். 2015–ம் ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 90 கோடிதான்.
* உலகில் தற்போது 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் எண்ணிக்கை 12½ கோடியாக உள்ளது. 2050–ம் ஆண்டுவாக்கில், சீனாவில் மட்டுமே இந்த வயதினர் எண்ணிக்கை 12 கோடியாக இருக்கும். உலக அளவில் இந்த வயதினரின் எண்ணிக்கை 43 கோடியே 40 லட்சமாக இருக்கும்.
* 2050–ம் ஆண்டில் மூத்த குடிமக்களில் 80 சதவீதம்பேர் அடித்தட்டு, நடுத்தர வருவாய் நாடுகளில் வசிப்பார்கள்.
* 2015–ம் ஆண்டை, 2050–ம் ஆண்டுடன் உலக சுகாதார அமைப்பு ஒப்பிடுகையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் விகிதாச்சாரம் 12 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயரும்.இவ்வாறு அந்த புள்ளிவிவரம் கூறுகிறது*
*தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.96 கோடி சிக்கியது
*டிவி பார்க்க தடை – மனமுடைந்த மாணவி தற்கொலை.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கண்டமங்லம்
*தந்தையுடன் சென்ற மாணவியை போதையில் கட்டிப்பிடித்த வாலிபர் கைது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்
*கோவில்பட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி – 10 பேர் காயம்.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டு இருந்தது. இன்று மாலை கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பரபுரம் பஸ் நிறுத்ததில் பயணிகளை இறங்கி விட்டு பஸ் கிளம்பிய போது தீடீரென நிலை தடுமாறி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது
*குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு விடிய விடிய மழை
செய்தி: விஸ்வரூபம்




