2015 உலகக் கோப்பையில் சாதித்த 5 பேட்ஸ்மென்கள்

2015 உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடரில் சாதனை படைத்த டாப் 5 பேட்ஸ்மென்கள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 22,293 ரன் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 38 செஞ்சுரிகள், அவற்றில் 2 இரட்டை சதங்கள், (அதுவும் முதல் முதலாக உலகக் கோப்பை இரட்டை சதம்), நூறு பந்துக்கு 89 ரன் என்ற ரன் ரேட் என இந்த உலகக் கோப்பை சாதனைகள் நீள்கின்றன. இவற்றில் பேட்டிங்கில் அசத்திய 5 பேர், மார்டின் குப்டில், குமார் சங்ககரா, ஏபி டி விலியர்ஸ், பிரெண்டன் டெய்லர், ஷிகர் தவான்.. ஆகியோர். குப்டில்: 547 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். 163 பந்தில் 237 எடுத்து உலக கோப்பை கிரிக்கெட் ரன்னின் உச்ச பட்ச சாதனை படைத்தார். குமார் சங்ககரா: 541 ரன் குவித்து இரண்டாமிடம். இதில் சராசரி 108.20 என்பது குறிப்பிடத்தக்கது. ஏபி டிவில்லியர்ஸ்: 482 ரன் குவித்தார். ஷிகர் தவான்: 449 ரன் எடுத்துள்ளார். பிரண்டன் டெய்லர்: 433 ரன் குவித்துள்ளார்.