
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘மிஸா’வில்தான் கைது செய்யப்பட்டாரா என்ற விவாதம் பெரிதாகக் கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை நெஞ்சுக்கு நீதியைப் படித்துப் பார்க்கச் சொன்ன திமுக,,. தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடிதம் ஒன்றை அதற்கான ஆதாரமாக வெளியிட்டுள்ளது.
மிஸா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப் படவில்லை, மிஸா நேரத்தில் கைது செய்யப் பட்டார். அவர் கைது செய்யப்பட்ட காரணமே வேறு! அவர் அரசியல் கைதி அல்ல, அப்போதைய ரவுடியிஸ அராஜக செயலுக்காக கைது செய்யப் பட்டார். ஆட்சியில் இருந்த போது ‘ஒரு கசமுசா’வில் ஈடுபட்டதால், காவல் அதிகாரி ஒருவர் அவரைப் பழிவாங்கினார் என்றும், கண்மண் தெரியாமல் அடி உதை விழுந்தது என்றும் சிலர் மேடைப் பேச்சில் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஊடக பேட்டி ஒன்றில், திமுக.,வின் பொன்முடி, ஸ்டாலின் மிஸாவில் கைதானார் என்றுதான் எங்களுக்கு செவிவழியாக செய்தி உள்ளது, மற்றபடி எதுவும் தெரியாது என்று கூறியதில் இருந்து, ஸ்டாலின் மிஸா விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதை அடுத்து, மிஸா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பாக அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனைக் கிளப்பியவர், அமைச்சர் பாண்டியராஜன்.
இந்த விவகாரத்தை திமுக விட்டாலும், அதிமுக விடாமல், ஆதாரங்களுடன் நிரூபித்தே தீருவோம் என அடம் பிடித்து வந்தது. அமைச்சர் பாண்டியராஜன் 2 நாளில் நிரூபிக்கிறேன் என்று சவால் விட்டார். ஆனால், முதல்வர் எடப்பாடியாருடன் பேசியதைத் தொடர்ந்து அமைதியாகிவிட்டார்.

இருப்பினும் இந்த விவாதம் சமூகத் தளங்களில் வைரலானது! இப்போதும், ஸ்டாலின் மிஸா கைதியா, மிஸ்ஸால் கைதியா என்று ரைம்மிங் போட்டு டிவிட்டர் தளங்களில் விவாதங்களைக் கிளப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் மகனும், தற்போதைய திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை, தி.மு.க., அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அக்கடிதம் 1977ம் ஆண்டு நவ.28 ஆம்தேதி, எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சென்னை மத்திய சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்த போது, மகன் ஸ்டாலினுக்கு எழுதப்பட்டது. தனக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியில் (ஸ்டாலின் மகன் உதயநிதி) சிறையிலிருந்து ஸ்டாலினுக்கு கருணாநிதி எழுதிய கடிதம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தக் கடிதமே ஒரு கேலிப் பொருளாகியுள்ளது. கடிதத்தில், துர்கா ஸ்டாலினை சாந்தா என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளது குறித்து கிண்டல் செய்து வருகின்றனர். ஒருவர், துர்கா என்றால் கோபாவேசம் கொண்ட இந்துக்கடவுளின் பெயர் என்பதால், திமுக., தலைவர் தன் மருமகளின் பெயரையே சாந்தா என்று பெயர் மாற்றி விட்டார் போலிருக்கிறது..! என்று கேலி செய்திருக்கிறார்.

இன்னும், கடிதத்தில் தேதி 28/11/77 என குறிப்பிட்டு, ‘மத்திய சிறை, சென்னை’ என உள்ளது…. என்று குறிப்பிட்டுள்ள டிவிட்டர் வாசிகள், மதராஸ் என்பது, 1996ம் ஆண்டு தான் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடைசியில் மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து விட்டீர்களே என மீம் தயாரித்து அதனை வைரல் ஆக்கி உள்ளனர்.
ஆயினும், சென்னை சிறை என்று அழைக்கப் பட்டு, பின்னாளில் மத்திய சிறை என்று அது அழைக்கப் பட்டதாக சிலர் தகவல் பதிவிட்டிருக்கின்றனர். ஆயினும், தேதி குறித்த சர்ச்சை மேலும் தூக்கலாகியுள்ளது.
மிஸா காலம் 1977 ஜனவரியில் முடிந்து, மார்ச்சில் விடுவிக்கப்பட்டு, தேர்தலே வந்துவிட்டது என்று கூறியிருக்கின்றனர் சிலர்.
சமூகத் தளங்களில்… இந்த விவகாரத்தில் எழுப்பப் படும் சில கருத்துகள்….
துர்கா வை சாந்தான்னு மாத்தி உளறி எழுதி இருக்கே… கட்டுமரம் இது மாதிரி செய்யாதே.. சுடலைதானே செய்யும்..
இதை தலீவர் தான் எழுதினாரா என்று ஆராய்ச்சி செய்தல் விட , கருணாநிதி DNA சுடலைக்கு பொருந்துதா இல்லை வேறுயாராவது அப்பனா என்று செய்யலாம்.
** Prakash Ramasamy
மிசாவில் கைதானது உண்மைதான்..
நம்பலைன்னா நெஞ்சுக்கு நீதி படி..
அதையும் தாண்டி நக்கீரன் பாரு..
நாளைக்கு முரசொலி, சன் கலைஞர் டீவிய கவனி..
இதுக்கும் மேல ஆதாரம் தேவைன்னா..
நீதிபதி இஸ்மாயில்ட்ட பேசுறியா..?
அவர் எப்பயோ பூட்டாருங்க்ணே..
அதாம்யா.. அவர்ட்டயே அனுப்பி வைக்கறோம்.. கேட்டு தெரிஞ்சுக்கலாம்ல..
Prema S இல்லை துக்ளக் குருமூர்த்தையைக் கேட்கலாம். சர்டிபிகேட்டெல்லாம் தராரு.. சுடலைக்கு..
நிமிர்ந்து நில்@akr_l நல்ல கேட்டுகுங்க மக்களே இதோட காலமே 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரிதான் ..ஆனா #ஸ்டாலின் 1977 ஆம் ஆண்டு ஜூலை மாசம் 19 நாள் இருந்திருகாப்டி… ஆக அனுபவிக்க போற தண்டனைக்கு முன் கூட்டியே விசாரனை கமிஷன் வச்சிருக்காங்கப்பா
செட்டப் பன்றத ஒழுங்கா பன்னுங்கடா #திமுககொத்தடிமை

இதனிடையே துக்ளக் இதழாசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி, துக்ளக் இதழில் எழுதியுள்ள கேள்வி பதில் இப்போது அடுத்த சர்ச்சை ஆகியுள்ளது. இது தொடர்பான சில சமூகத் தளக் கருத்துகள்….
ஸ்டாலின் மிசா கைதி என்பது உண்மை தான் அது எனக்கே தெரியும்
ஏன் அவசர நிலைக்கு பின்பு 1977 ல் நடைபெற்ற தேர்தலில் நான் ஸ்டாலினுடன் இணைந்து முரசொலி மாறனுக்காக அப்போ தேர்தல் பிரச்சாரம் கூட செய்தேன்
~ துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் #குருமூர்த்தி
உளறுவதற்கு யாரும் இல்லையே என்று தமிழக மக்கள் கலங்கவே தேவையில்லை..!
தமிழகம் உருப்பட்டுவிடுமோ என்று பயப்படவும் தேவையில்லை..!
முதலில் தமிழிசை.. அவர் கவர்னராகும் முன்னரே பொன்னாரை நியமித்தார். தற்போது இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து குருமூர்த்தி.
அவசர காலம் முடிந்த பிறகு இவரும் ஸ்டாலினும் ஒன்றாக முரசொலி மாறனுக்குப் பிரசாரமெல்லாம் செய்தாராம். அதனால் ஸ்டாலின் “மிசா கைதி” தானாம். குருமூர்த்தி சான்று பத்திரம் கொடுத்துவிட்டார்..!
என்னத்தச் சொல்ல..!
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் #குருமூர்த்தி
ஸ்டாலின் மிசா கைதி அல்ல, குருமூர்த்தி சொல்வது தவறு.
அப்போதைய சென்ட்ரல் ஜெயில் கைதிகள் எல்லாம் மிசா கைதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் குருமூர்த்தி.
1977 தேர்தலில் திமுக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் RSS மேலிடத்து உத்தரவுப்படி இந்திராவை வீழ்த்த திமுகவுக்கும் சேர்த்து தேர்தல் பணியாற்றினோம்.
தென் சென்னை வேட்பாளரான முரசொலி மாறனுக்கு தேர்தல் வேலை செய்த நூற்றுக்கணக்கான RSS தொண்டர்களில் குருமூர்த்தியும் ஒருவர்.
நானும் கூடத்தான் வட சென்னை வேட்பாளரான மறைந்த திரு A.V.P ஆசைத்தம்பிக்கு வேலை செய்தேன்.
அதனால் நான் சர்டிபிகேட் கொடுக்க முடியுமா?
மிசா கைதிகள் தனி செல்லில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் ஸ்டாலினோ தனி பங்களாவில் தங்க வைக்கப்பட்டார்.
அப்போதைய ஜெயில் நிலவரம் குருமூர்த்தியை விட எனக்கு நன்கு தெரியும், ஸ்டாலின் மிசா கைதி அல்ல.
Indu Samaya Tamil Kazhakam மிசா காலத்தில் கைது செய்யப்பட்டது உண்மை.ஆனால் அவர் அரசியல் கைதி அல்ல பாலியல் குற்றவாளி.குருமூர்த்தி சொன்னது முன்பாதி.அவர் பின்பாதியையும் சொல்ல வேண்டும்
R Nagarajan 1977, 1999, 2001 தேர்தல்களில் திமுகவோடு கூட்டணி இருந்தது. எதிர்காலத்தில் திமுகவோடு கூட்டு வராது என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. அரசியலில் வெற்றி ஒன்றுதான் இலக்கு . அவ்வளவுதான்
KG Jawarlal அது எமர்ஜென்சியைத் தொடர்ந்து நடந்த தேர்தல்தான். முரசொலி மாறன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜனதா கட்சி ஆதரவுடன் போட்டியிட்டார் என்பது சரிதான். அந்தத் தேர்தலில் நானும் ஓட்டுப் போட்டிருக்கிறேன்.



