விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மீதும் விசிக-வினர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நடன இயக்குநர் நடிகை காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான படுகொலையாகவே பார்க்கப் படுகிறது.
காயத்ரி ரகுராமின் டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு 3 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்கள் இருந்தனர்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஹிந்து கோவில்கள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கையாளர்கள் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர்.
திருமாவளவனுக்கு தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் திருமாவளவனின் பேச்சை பகிர்ந்து இந்த கொச்சை பேச்சுக்கு தாங்கள் கண்டனம் தெரிவிப்பதாக கூறியிருந்தனர்.
அவர்களின் வரிசையில் நடிகையும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் தான் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் என்றும் தாம் சார்ந்த மதம் குறித்து கொச்சையாக பேசிய திருமாவளவன் தண்டிக்கப்பட வேண்டிய நபர் என்றும், அதற்காக அவரை எங்கு பார்த்தாலும் சவுக்கடி கேள்விகளை கேளுங்கள் என்றும் பதிவு செய்திருந்தார்!
காயத்ரி ரகுராமின் கடுமையான கண்டனங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் பதில் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தனது கருத்துகளுக்கு ஆதரவு தேடும் விதமாக, அவர் பாமக., நிறுவுனர் ராமதாஸின் உதவியையும் கோரியிருந்தார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஹிந்து மதம் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார் காயத்ரி ரகுராம்.
குறிப்பாக ராஜபக்சே குறித்து திருமாவளவன் கூறிய மோசமான சொல்லாடல்களையும், ராஜபக்சேதான் தன்னிடம் வந்து கைகுலுக்கினார் என்று பொய்களை அவிழ்த்து விட்டதையும் கண்டித்த காயத்ரி ரகுராம் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த வீடியோவை பதிவு செய்தார்!
அந்த வீடியோ வைரல் ஆனது. இதை அடுத்து விசிக., ஐ.டி.விங் காயத்ரி ரகுராம் பதிவினை போலியாக தங்களுடையது என்று காப்பி ரைட் க்ளெய்ம் செய்து அந்த வீடியோ நீக்கப்படுவதற்கு கடுமையாக வேலை செய்தனர். மேலும் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பின்பற்றும் காயத்ரி ரகுராம் டிவிட்டர் பக்கத்தினை ரிப்போர்ட் செய்வதற்கு முயற்சி செய்தனர்!
அதனால் தற்போது காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கம் முடங்கியுள்ளது. இதனால் அவருக்கு என்ன நடந்தாலும் அது வெளியில் தெரியாது என்ற நிலை உருவாகி உள்ளது!
மேலும் காயத்ரி ரகுராமின் கருத்துக்களும் அவரது டிவிட்டர் பக்கம் மூலம் வெளியாகும் வாய்ப்பும் தடைசெய்யப்பட்டுள்ளது!இது கருத்து சுதந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்!
டிவிட்டர்வாசிகள், திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்!