டாஸ்மாக் விபரீதம் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை!

Published:

women - 2026

மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்

சென்னை நம்மாழ்வார் பேட்டை பாரக் 2-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன். 52 வயதான இவர் கட்டடத் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.

லோகநாதனுக்கு இரண்டு மகன்கள் 19 வயதில் ஒரு மகள். மூத்த மகனுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்! லோகநாதன் இளைய மகன் மகள் ஆகியோர் அவர்களது சிறிய வீட்டில் வசித்து வந்தனர்.

லோகநாதன் தன் மகளை எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தி உள்ளார். அதன் பிறகு மகளை வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே முடங்கி வைத்துள்ளார். சில ஆண்டுகளாக அவர் மகளுக்கு மனநலம் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லோகநாதன் மது போதையில் இருந்ததை அவரது இளைய மகன் கண்டித்து விட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். மேலும் தனது தந்தை போதையில் இருந்தால் வீண் தகராறு செய்வார்; அது வழக்கம் என்பதால் இதுகுறித்து தனது அண்ணனிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இதனால் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தங்கைக்கு ஏதாவது ஆபத்து நேரிடலாம் என்று நினைத்த லோகநாதனின் மூத்த மகன் மதியம் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது லோகநாதன் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் லோகநாதனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். லோகநாதன் மகனை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தலைமைச் செயலக குடியிருப்பு மகளிர் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தப்பா 48 வயதான அய்யாவு என்பவரும் அவரது மகன் மணி (23 வய) ஆகியோரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்!

Related articles

Recent articles

spot_img