ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான கீதா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் முதலமைச்சராக சசிகலா பதவியேற்கப்போகிறார் என்பது பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டது.
கேள்வி: சசிகலாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்த்தால் என்ன?
பதில்: தேர்தலில் போட்டியிடட்டும். அவர் பொதுச்செயலாளராக ஆனபோதே என்ன செய்திருக்கலாம் சசிகலா புஷ்பாவிடமும், கீதாவிடமும் வேட்பு மனுவை வாங்கியிருக்கலாம். எல்லாத்தையும் வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பொதுச்செயலாளராக வந்திருக்கலாம். தேர்தலில் நின்றுவிட்டே வாங்களேன். என்ன அவசரம். ஜெயலலிதாவினடைய தோழிதானே, அதே ஆர்.கே. நகர் தொகுதியில அழகா நின்று ஜெயிச்சு வாங்க. மக்கள் உங்கள ஏத்துக்கிட்டதா சொல்றீங்க. அப்படியின்னா தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வாங்க. முதலமைச்சராக வாங்க.
கேள்வி: ஒ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருந்தாலும், சசிகலாதான் ஆட்சி நடத்துகிறார். அப்படியிருக்கும்போது சசிகலா முதல்வரானால் என்ன.
பதில்: ஒ.பன்னீர்செல்வத்துக்கு இது நல்லதுதான். அவுங்க பன்ற ஊழலுக்கு இவர் மாட்டுவாரு. அவங்க பன்ன ஊழலுக்கு ஜெயலலிதா ஜெயில்ல இருந்தாங்க. சசிகலாவே சி.எம்.ஆக இருக்கட்டும். மக்கள் தூக்கி எறிவார்கள். அன்றைக்கு தெரியும்.
கேள்வி: சசிகலா முதல்வராக வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூடுவது போன்ற பல அறிவிப்புகளை வெளியிடும்போது மக்களின் எதிர்ப்பு நிலை மாறாதா?
பதில்: அதனை அன்றைக்கு பார்த்துக்கொள்ளலாம். ஜெயலலிதா பின்னால் இருந்து நிழல் முதல் அமைச்சராக இருந்தார். ஆகையால் உடனே மாறப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்க்கலாம். நாங்கள் நெகட்டிவாகத்தான் பார்க்கிறோம் என்று கூறினார்.



