ஸ்டாலினை தலைவராக ஏற்ற பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை கோரி பாஜக., மேலிடத்துக்கு கடிதம்!

Published:

arasakkumar - 2026

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் பிடி அரசகுமார் புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய போது தமது தலைவர் மு க ஸ்டாலின் என்றும் தாம் என்றென்றும் திமுக கட்சி கரை வேட்டி கட்டி திமுக காரன் எப்பொழுது வேண்டுமானாலும் இருப்பவன் என்றும் கூறினார் அவரது இந்த பேச்சுக்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது இந்த நிலையில் அவர் மீது கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது இதுகுறித்து பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக நிர்வாகியின் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் 1 12 2019 அன்று நடைபெற்றது.

இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் பிடி அரசகுமார் கலந்துகொண்டு பேசினார்

அப்போது அவர் எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் இயக்கத்திற்காக நன்றிக் கடன் பட்டவன். காலம் கனியும். காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார்.

அதையெல்லாம் நாம் பார்த்து அக மகிழ்ச்சி அடைவோம் என்றும் நான் ஏற்கனவே திமுக கரைவேட்டி கட்டியவன் எப்போது வேண்டுமானாலும் கட்டிக் கொள்வேன் யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அவரின் இந்த பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியத் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

தேசிய தலைமையிலிருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எந்தவித நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது என்று பாஜக மாநில பொது செயலாளர் மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் கே எஸ் நரேந்திரன் கையெழுத்திட்டு பத்திரிகை அறிக்கை ஒன்று இன்று அனுப்பப்பட்டிருந்தது.

bjp statement - 2026

Related articles

Recent articles

spot_img