அழகான விஷயங்களை உணரத்தான் முடியும்: பிரபல நடிகை கர்ப்பத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்!

Published:

dhivya unni 6 - 2026

திவ்யா உன்னி அமெரிக்காவில் இருந்து கர்ப்பத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

dhivya unni 7 - 2026

பிரபல நடிகை திவ்யா உன்னி. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமான அவர், தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

dhivya unni 4 - 2026

இவர் பிரபல நடன கலைஞரும் கூட. பரதநாட்டியம், குச்சிப்புடி, மோனியாட்டம் உட்பட பல்வேறு நடனங்களை கற்றுள்ளார். நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

dhivya unni 8 - 2026

சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

dhivya unni 5 - 2026

பின்னர் அருண் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அங்கு ஹூஸ்டன் நகரில் ஶ்ரீபடம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
dhivya unni 2 - 2026

அங்கு பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களை அவர் கற்றுத்தருகிறார். இந்நிலையில் திவ்யா உன்னி கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் வளைகாப்பு விழா நடந்தது.

dhivya unni - 2026

இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கர்ப்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

dhivya unni 1 - 2026

அதில், உலகின் மிகவும் அழகான விஷயங்களைப் பார்க்க முடியாது, ஏன் தொடக் கூட முடியாது. அது இதயத்தால் மனப்பூர்வமாக உணரப்பட வேண்டும் என்கிற கெலன் கெல்லரின் வாசகத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhivya unni 3 - 2026

Related articles

Recent articles

spot_img