
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவுடையார் கோவில் பகுதிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
செல்லும் வழியில், சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக கீழே காரில் இருந்து கீழே இறங்கிய அமைச்சர், அந்த இளைஞரின் தலையில் உள்ள ரத்தத்தை துடைத்து முதலுதவி அளித்துள்ளார்.
அதன் பின்னர், அவருடன் பாதுகாப்புக்காக வந்த வாகனத்தில் ஏற்றி அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், மருத்துவமனைக்கு போன் செய்து உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” மனமெங்கும் பரவி கிடக்கிறது நிம்மதி.காலனின் கயிற்றில் விழுந்த ஒரு உயிரை கணப்பொழுதில் மீட்டெடுத்த பிரமிப்பு இன்னமும் நீங்காதிருக்கிறேன். ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு.

உயிருக்குப் போராடுபவர்களைப் படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள்” என்று பதிவிட்டு அந்த விடீயோவையும் ஷேர் செய்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் மனித நேயம் மிக்க இந்த உதவியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மனமெங்கும்பரவி கிடக்கிறதுநிம்மதி
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) December 28, 2019
காலனின் கயிற்றில் விழுந்த ஒரு உயிரை
கணப்பொழுதில் மீட்டெடுத்த பிரமிப்பு
இன்னமும் நீங்காதிருக்கிறேன்
ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு
உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் #helpinghand pic.twitter.com/l17GzndwMO



