இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்விக்கு பணம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசின் பட்ஜெட்டில் 26 ஆயிரத்து 932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து அத்துறையின் மேல் தனி கவனம் செலுத்தி செயல்பட்டு வந்ததார்.
பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணனி, விலையில்லா 2 செட் சீருடை, விலையில்லா புத்தகங்கள், விலையில்லா காலணிகள், இலவச பேருந்து கட்டணம், பென்சில் , கிரேயான் என பள்ளிக்குழந்தைகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கி குழந்தைகள் மத்தியில் மகத்தான இடம் பிடித்திருந்தார்.
அத்தகைய பெருமை வாய்ந்த ஜெயலலிதாவின் மறைவு பள்ளிக் குழந்தைகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா இல்லாமல் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் அப்படியே ஜெயலலிதாவின் பாணியிலேயே உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை சலுகைகளும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2017 – 18 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லா அளவுக்கு பள்ளிக்கல்வித் துறைக்கு 26,932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பள்ளி மாணவ-மாணவிகளை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கச் செய்துள்ளது.



