
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக 16 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் ஆரவல்லி மலைத்தொடர் அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அங்கு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடியபடி இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஷ்ரவன் குமார் (34), நிதேஷ் மிஸ்ரா (30) என்ற இரு இளைஞர்களும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டனர். இதனை எதிர்த்தனர் சிறுமியின் நண்பர்கள் அவர்களை இந்த இளைஞர்கள் அடித்து விரட்டினர்.

பின்னர், இருவரும் சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தினர் மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்ட அவர்கள் இதனை வெளியே கூறினால், வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர்.
வீடு திரும்பிய சிறுமியும், நண்பர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.



