செல்பி எடுக்க முயன்ற வாலிபரை குதிரை கடித்துக் குதறிய சம்பவம், கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
_*⭕கண்ணூர்*_
இளைய தலைமுறையினர் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரையும் செல்பி மோகம் ஆட்டிப்படைத்து வருகிறது.
சமூக வலைதளங்களில் லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அந்த வரிசையில், குதிரையுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை அந்த குதிரை கடித்து காயப்படுத்திய சம்பவம் கேரளா மாநிலத்தில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சாஜித்(வயது 37). நேற்று மாலை 7 மணியளவில் இவர் அப்பகுதியில் உள்ள பய்யம்பலம் கடற்கரையில் நின்று தன்னைத்தானே செல்பி எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கிருந்த குதிரையின் முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொள்ள சாஜித் விரும்பியுள்ளார்.
தனது ஆசைப்படி குதிரை முன்னால் சாஜித் செல்பி எடுக்க முயன்றபோது, குதிரை அவரை கடித்துள்ளது.
இதனைக்கண்ட அவரது நண்பர்கள் வேகமாக ஓடிவந்து குதிரையின் வாயிலிருந்து சாஜித்தைக் காப்பாற்றி அருகிலிருந்த மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
குதிரை கடித்ததில் அவரது மார்பில் காயம் அதிகமாக இருந்ததால் தற்போது கோழிக்கோடு மருத்துவமனைக்கு சாஜித் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




