தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தம் தொடரும் என சண்முகப்பா அறிவித்துள்ளார். ஹைதெராபாத்தில் நடந்த இன்சூரன்ஸ் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் லாரி உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. போராட்டத்திற்கு அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் சண்முகப்பா கூறியுள்ளார்._
_கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், 8-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் ஓடாது என்றும் சண்முகப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் பிரீமியத் தொகை, சுங்கக் கட்டண உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து லாரி உரிமையாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்._



