திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.



