anna - 2026

உக்ரைன் நாட்டில் பெற்ற தந்தையே தனது மகளின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா. இவரது மகள் பெயர் அன்னா கிறிஷ்டிகா வயது 16. அன்னாவின் தந்தை குடிக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

anna 2 - 2026

இந்நிலையில் அன்னாவின் தந்தைக்கும், தாய்க்கும் வீட்டில் கடுமையான சண்டை நடந்துள்ளது. தனது தாயை – தந்தை அடிப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அன்னா தனது தந்தையை பின்புறமாக சென்று கட்டி பிடித்துக்கொண்டார். அன்னாவின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாத அவரது தந்தை ஒரு கட்டத்தில் சண்டையை விட்டுவிட்டு கோவமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

anna 3 - 2026

சண்டை போட்ட கோவத்தில்தான் அவர் வெளியே போகிறார் என அனைவரும் நினைத்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்த அவர் அன்னாவின் அறையை பூட்டிவிட்டு அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருந்து அன்னா தப்பிக்க முயற்சி செய்த போது அவரது முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

anna 1 - 2026

இதில், முகம் முழுவதும் எரிந்த நிலையில், அலறி துடித்த அன்னாவை மீட்டு அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையின்ர் அன்னாவின் தந்தை மீது பல குற்றங்களின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending