மகா சிவராத்திரி: கோதாவரி தீரத்தில் குவிந்த பக்தர்கள்!

சற்றுமுன்
godavari shivrathri1 - 2026

கோதாவரி நதி தீரத்தில் சிவ நாம ஸ்மரணை. மகாசிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு புனித கோதாவரி நதி தீரத்தில் பக்தர்கள் குழுமினர்.

ராஜமகேந்திரவரத்தில் புஷ்கர காட், கோடிலிங்க படில்துறைகளில் பக்தர்கள் விடியற்காலை முதலே பெருமளவில் வந்து சேர்ந்தார்கள். கோதாவரியில் புண்ணிய ஸ்நானம் செய்து அதன்பின் சிவாலயங்களில் தரிசனம் செய்து கொண்டார்கள்.

godavari shivrathri3 - 2026

உமா கோடிலிங்கேஸ்வர ஸ்வாமி, உமா மார்கண்டேய சுவாமி, விஸ்வேஸ்வர சுவாமி, பலிமல உமா கொப்பேஸ்வர சுவாமி, ஏலேஸ்வரம், தர்மவரம், காகிநாடா, தூரங்கி, கணபூரு… கோவில்களில் தரிசனம் செய்து கொள்வதற்காக பக்தர்கள் பெருமளவில் வந்து சேர்ந்தனர். பக்தர்களின் சிவ நாம ஸ்மரணை ஆலயங்கள் முழுதும் எதிரொலித்தன.

பஞ்சாராம க்ஷேத்திரங்களான சாமர்லகோட்ட, த்ராக்ஷாராமம் போன்றவற்றில் பக்தர்களின் கூட்டம் மிகுதியாக உள்ளது. சாமர்லகோட்டவில் சுவாமி தரிசனத்திற்கு க்யூவில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தார்கள்.

godavari shivrathri2 - 2026

உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் சேவையில் ஈடுபட்டு, ஆலய ஊழியர்கள் பக்தர்களை சரியாக கவனிக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினார்கள். பெண்கள் முதியோர்கள் குழந்தைகள் க்யூவில் நின்று மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.