சிறார் வதை வீடியோ: முகநூலில் பகிர்ந்த இளைஞர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
child 2 - 2026

தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியில் வசித்து வரும் சோழராஜன் என்பவரின் மகன் சீனு (26). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. அதிலேயே மூழ்கிப் போன சீனு, ஒரு கட்டத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த சிறார் ஆபாச வீடியோக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.

seenu - 2026

சிறார் ஆபாசப் படங்களைப் பதிவேற்றும் நபர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்து வரும் நிலையில், சீனுவும் போலீசார் விரித்த வலையில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து சீனு மீது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த தகவலை தர்மபுரி கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

03 July11 Facebook - 2026

அதனடிப்படையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், சீனுவின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த வீடியோக்களை வைத்து சீனுவை நேற்று கைது செய்துள்ளனர். சீனு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததை அறிந்த சீனு குடும்பத்தினர், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.