அதிமுக., சார்பில் மாநிலங்களவைக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published:

aiadmk interview - 2026

அதிமுக சார்பில், மாநிலங்களவைக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக., வின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் மாநிலங்களவைக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

முன்னதாக, திமுக., சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் தனது உறுப்பினர்களின் பட்டியலை திமுக., கடந்த வாரம் வெளியிட்டது. அதன்படி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் களமிறக்கப்படுகிறார்கள்

தமிழகத்தில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்து 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெறவிருக்கிறது

Related articles

Recent articles

spot_img